Wednesday, 18 December 2013

தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பொருள் மிகவும் பழைமையானது; 2000 ம் வருடங்களுக்கு முற்பட்டது என்பதை எல்லாம் எப்படி கண்டறிகிறார்கள்?

அறிவியல் விஞ்ஞானத்தை அடிப்படையாய் வைத்துக் கொண்டு 1949 ம் ஆண்டு வில்லியர்ட் லிபி என்ற ரசாயனத்துறை பேராசிரியர் பழமை வாய்ந்த பொருள்களின் வயதைக் கண்டு பிடிக்க "ரேடியோ கார்பன் டேட்டிங்(Carbon Dating)" என்னும் ஒரு முறையை கண்டு பிடித்தார். கண்டு பிடித்த 11 ஆண்டுகள் கழித்து தான் மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் அந்த முறையை ஏற்றுக் கொண்டார்கள். அதன் விளைவாக 1960 ம் ஆண்டு "வில்லியர்ட் லிபி" க்கு நோபல் பரிசு கிடைத்தது. இவர் கண்டு பிடித்த "ரேடியோ கார்பன் டேட்டிங்" என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

வான வெளியில் உள்ள காஸ்மிக் கதிகள் பூமியை நோக்கி பாயும் பொது அதில் உள்ள நியூட்ரான்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனோடு இணைந்து கிரியை புரிகின்றன. அதன் விளைவாக நியூட்ரான்கள் நைட்ரஜன் அணுக்களில் நுழைகிறது. இப்படி நுழைவதன் மூலம் நைட்ரஜனின் உட்கரு சற்று பெரிதாகி ஒரு ரேடியோ கர்பனாக மாறுகின்றது. இதற்க்கு "கார்பன் 14" என்று பெயர்.

இந்த கார்பன் அணுக்கள் சூரிய வெளிச்சத்தின் உதவியோடு ஒளிச் சேர்க்கை மூலம் எல்லா தாவரங்களிலும் புகுந்து விடுகின்றன. ஒரு மரமோ செடியோ உயிருடன் இருக்கும் வரையில் கார்பன் அணுக்களின் அளவு சீராய் இருக்கும். அதாவது அது காற்றில் இருந்து வாங்கும் கார்பனும், அது வெளிப்படுத்தும் கார்பனும் ஒரே விகிதத்தில் இருக்கும். தாவரம் இறந்ததும் அதற்குள் ரேடியோ கார்பன் புகமுடியாது. அதன் காரணமாய் ரேடியோ கார்பன் -14 கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்கும். 5570 ஆண்டுகளில் பாதியாக குறைந்துவிடும் 11000 ஆண்டுகளில் 25% கார்பன் மட்டுமே அந்த இறந்து போன தாவரத்தில் இருக்கும். ஒரு கட்டத்தில் ரேடியோ கார்பன் சாதாரண கர்பனாய் மாறிவிடும். இந்த ரேடியோ கார்பனின் அளவை வைத்துதான் பூமிக்கடியில் புதையுண்ட பொருள்கள் வெளியே வரும்போது அது எத்தனை ஆண்டுகள் பழைமையானது என்பதை துல்லியமாய் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள்.

-----------------------------------------------------------------
From: Crime Novel - Rajeshkumar @2013 - நாவல் 193


Visit: Crime Novel - Rajeshkumar


https://www.facebook.com/photo.php?fbid=580288961994202&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

No comments:

Post a Comment