நம் நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் வாகன ஓட்டிகளா இல்லை பொது மக்களா ?இரண்டும் இல்லை, விபத்துக்களுக்கு காரணம் வாகனங்களின் அபிரிமிதமான வளர்ச்சிதான் என்கிறது ஒரு சர்வே. சமீபத்தில் (அதாவது 2012 டிசம்பரில்) கணக்குப் படி இந்தியாவில் உள்ள மொத்த லாரிகளின் எண்ணிக்கை 34 லட்சம், பஸ்களின் எண்ணிக்கை 13 லட்சம் இது தவிர 15 லட்சம் டாக்சிகளும் 1 கோடியே 25 லட்சம் கார்களும் 9 கோடி இரு சக்கர வாகனங்களும், இது தவிர பல லட்சக்கணக்கான மூன்று சக்கர வாகனங்களும் இந்திய முழுவதும் ஓடி கொண்டு இருக்கின்றன . வாகனங்கள் பெருகிய அளவுக்கு சாலை வசதிகள் மேம்படுத்தப் படவில்லை . குறுகிய சாலைகள் , குண்டும் குழியுமான சாலைகள் தான் விபத்துக்கு காரணமாக உள்ளது. 2000 ம் வருடம் சாலை விபத்துகளில் தமிழ் நாட்டில் மரணம் அடைந்தவர்கள் 8269 பேர் . இந்த 2012 ல் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 14359. தேசிய குற்ற ஆவணத்தின் மதிப்பீட்டின் படி சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ் நாடு முதல் இடத்தில் உள்ளது.
சிங்கபூர் ஒரு சிறிய நாடு என்றாலும் கார்களும் மற்ற வாகனங்களும் லட்ச கணக்கில் உள்ள நாடு. இருந்தாலும் சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசலோ, சாலை விபத்துகளோ ஏற்படுவது இல்லை அப்படியே ஒன்றிரண்டு சாலை விபத்து ஏற்பட்டாலும் உயிர் சேதம் உண்டாவது இல்லை.போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சிங்கபூர் அரசு அதிரடியாய் சில முடிவுகளை எடுத்து அதை நடைமுறை படுத்தி வருகிறது. அதில் ஒன்று தனியார் வாகன(கார்) போக்குவரத்தை கட்டுப்படுத்தி வைத்து இருப்பது. ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தனி நபர் வைத்து இருக்கும் கார்கள் சிங்கபூர் சாலைகளில் பயணம் செய்யவேண்டும் அரசு சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அதாவது பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு அங்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சீனாவிலும் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன் கூட்டியே திட்டம் போட்டு அதை செயல் படுத்து கிறார்கள். 2020 ம் ஆண்டில் வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டு சாலைகளை அகல படுத்தி நவீன கட்டமைப்புகளை செய்கிறார்கள்.
அனால் "நம் நாட்டில் இது சத்தியமா" என்ற கேள்விக்கு இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் நம் மத்திய அரசின் சென்ற ஆண்டின் மொத்த வருமானமே 14 லட்சம் கோடி. இதில் 6 லட்சம் கோடி பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் இறக்குமதிக்கே செலவாகி விடுகிறது . நவீன கட்டமைப்புகளுக்கு செலவழிக்க பணம் ஏது? பெட்ரோல் டீசலோடு எத்தனாலை கலந்து உபயோகித்தால் 30 சதவீத அளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தி சாலையின் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
@2013 -> நாவல் 193 -> விளக்கம் ப்ளீஸ் விவேக்
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=579072695449162&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பொருள் மிகவும் பழைமையானது; 2000 ம் வருடங்களுக்கு முற்பட்டது என்பதை எல்லாம் எப்படி கண்டறிகிறார்கள்?அறிவியல் விஞ்ஞானத்தை அடிப்படையாய் வைத்துக் கொண்டு 1949 ம் ஆண்டு வில்லியர்ட் லிபி என்ற ரசாயனத்துறை பேராசிரியர் பழமை வாய்ந்த பொருள்களின் வயதைக் கண்டு பிடிக்க "ரேடியோ கார்பன் டேட்டிங்(Carbon Dating)" என்னும் ஒரு முறையை கண்டு பிடித்தார். கண்டு பிடித்த 11 ஆண்டுகள் கழித்து தான் மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் அந்த முறையை ஏற்றுக் கொண்டார்கள். அதன் விளைவாக 1960 ம் ஆண்டு "வில்லியர்ட் லிபி" க்கு நோபல் பரிசு கிடைத்தது. இவர் கண்டு பிடித்த "ரேடியோ கார்பன் டேட்டிங்" என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
வான வெளியில் உள்ள காஸ்மிக் கதிகள் பூமியை நோக்கி பாயும் பொது அதில் உள்ள நியூட்ரான்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனோடு இணைந்து கிரியை புரிகின்றன. அதன் விளைவாக நியூட்ரான்கள் நைட்ரஜன் அணுக்களில் நுழைகிறது. இப்படி நுழைவதன் மூலம் நைட்ரஜனின் உட்கரு சற்று பெரிதாகி ஒரு ரேடியோ கர்பனாக மாறுகின்றது. இதற்க்கு "கார்பன் 14" என்று பெயர்.
இந்த கார்பன் அணுக்கள் சூரிய வெளிச்சத்தின் உதவியோடு ஒளிச் சேர்க்கை மூலம் எல்லா தாவரங்களிலும் புகுந்து விடுகின்றன. ஒரு மரமோ செடியோ உயிருடன் இருக்கும் வரையில் கார்பன் அணுக்களின் அளவு சீராய் இருக்கும். அதாவது அது காற்றில் இருந்து வாங்கும் கார்பனும், அது வெளிப்படுத்தும் கார்பனும் ஒரே விகிதத்தில் இருக்கும். தாவரம் இறந்ததும் அதற்குள் ரேடியோ கார்பன் புகமுடியாது. அதன் காரணமாய் ரேடியோ கார்பன் -14 கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்கும். 5570 ஆண்டுகளில் பாதியாக குறைந்துவிடும் 11000 ஆண்டுகளில் 25% கார்பன் மட்டுமே அந்த இறந்து போன தாவரத்தில் இருக்கும். ஒரு கட்டத்தில் ரேடியோ கார்பன் சாதாரண கர்பனாய் மாறிவிடும். இந்த ரேடியோ கார்பனின் அளவை வைத்துதான் பூமிக்கடியில் புதையுண்ட பொருள்கள் வெளியே வரும்போது அது எத்தனை ஆண்டுகள் பழைமையானது என்பதை துல்லியமாய் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள்.
-----------------------------------------------------------------
From: Crime Novel - Rajeshkumar @2013 - நாவல் 193
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=580288961994202&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
*ட்விட்டர், பேஸ்புக் பார்ப்பது வேஸ்ட் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன..?**அதற்க்கென்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கி பார்ப்பதில் தப்பு இல்லை. வாழ்க்கையில் நாம் புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை அந்த வலை தளங்களில் இரண்டே வரிகளில் சொல்லி அசத்துகிறது ஒரு கூட்டம். அண்மையில் நான் ரசித்த சில வார்த்தை வரிகள்:1. இன்றைய காலத்து அன்பும் பாசமும் அவரவர் வீடு வளர்ப்பு பிராணிகளோடு முடிந்து விடுகிறது.
2. நட்பை விட பகை 100% நம்பகமானது.
3. சிகரெட்டை அழகாக தயாரித்து அதற்க்கு வெண்ணிற உடை மாட்டி பளபளப்பான எழுத்துக்களில் "உடல் நலத்துக்கு தீங்கானது" என்று எழுதி வைக்கும் பொறுப்பான உலகம் இது.
4. நல்லவனாய் இரு. ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே !. அதை விட முட்டாள்தனமான விஷயம் எதுவும் இல்லை.
5. தமிழ்ப் புத்தாண்டு இரண்டு வகைப்படும். 1.அம்மா தமிழ் புத்தாண்டு; 2. அய்யா தமிழ் புத்தாண்டு;
6. செவ்வாய் கிரகம் செல்ல முடியாத அளவுக்கு தூரமாய் இருந்தாலும் அங்கேயாவது சொந்த நிலம் வாங்கணும்ங்கற வெறியை நமக்கு வரவழைக்கும் பெருமை ரியல் எஸ்டேட் ஓனர்களையும் , கவுன்சிலிங் செய்யும் டி.வி நடிகர் நடிகைகளையுமே சாரும்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=607478702608561&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
இரண்டாவது உலகப் போரில் 60 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
அவர்களின் நினைவாக இஸ்ரேலில் ஒவ்வொருவர்க்கும் ஒரு மரம் நட்டு, ஒரு பெரிய வனப்பகுதியையே உருவாக்கியிருக்கிறார்கள்.
பெரியவர்களின் நினைவாக 45 லட்சம் பைன் மரங்களும்,
குழந்தைகளின் நினைவாக 15 லட்சம் சைப்ரஸ் மரங்களும்
நடப்பட்டு இருக்கின்றன.
60 லட்சம் மக்கள் இந்த 2013-லும் அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
- மரங்களாக..!
Visit: Crime Novel - Rajeshkumar
யாரைப் பார்த்தாலும் ஒரு பிரச்சனையோடு இருக்கிறார்கள், பிரச்சனையில்லாமல் சந்தோசமாக வாழ என்ன வழி ?சந்தோசமாக வாழ முயற்சி செய்யாமல், நிம்மதியாய் வாழ முயற்சி செய்தால் போதும்வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழலாம்.
Visit: Crime Novel - Rajeshkumar
அதிர்ச்சியான புள்ளி விபரம்:தமிழ்நாட்டில் நூலகங்களைக் காட்டிலும் டாஸ்மாக் கடைகள் அதிகம் இருக்கிறது.டாஸ்மாக் 4000 க்கு மேல், நூலகங்கள் 3000 க்கு கீழ் இளைய சமுதாயம் குடிக்குமா...? இல்லை, படிக்குமா..?
Visit: Crime Novel - Rajeshkumar
பூமியின் நிலபரப்பு 23% ஆனால் நீர்பரப்போ 77%. இந்த நீர் பரப்பில் 97% குடிக்க பயன்படாத கடல் நீர்.மீதி உள்ள 3% நீர்தான் மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பயன்படுகிறது. தற்போதைய புள்ளி நிலவரப் படி உலக நாடுகளுக்கு 5% குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் இருப்பதோ 3% தண்ணீர் தான். பருவகாலங்களில் பெய்யும் மழையால் பெரும்பாலான நாடுகள் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்கின்றன. இந்த நீரின் அளவு குறையும் போது அண்டை நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Visit: Crime Novel - Rajeshkumar
இரவில் குழந்தைகள் படுத்து தூங்கும் போது பெரிய சைஸ் எறும்புகள், சிறிய வண்டுகள், பறக்கும் ஈசல்கள் போன்றவை அவர்களின் காதுக்குள் புகுந்து கொண்டு வெளியே வர முடியாமல் தத்தளிக்கும். குழந்தைகள் அந்த இம்சை தங்காமல் வீரிட்டு அழ ஆரம்பித்துவிடும். குழந்தைகளின் காதுகளில் பூச்சிகள் புகுந்து கொண்டால் நாம் செய்ய வேண்டிய முதல் வேலை அந்த பூச்சிகளை கொல்ல வேண்டியது தான். அதற்க்கு முதலில் குழந்தையின் காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெயை விட வேண்டும். எண்ணெய் காதுக்குள் போனதும் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் அந்தப் பூச்சிகள் உடனே இறந்து விடும். அதற்க்கு பிறகு குழந்தையை டாக்டரிடம் கூடிப் போய் இறந்த பூச்சியை காதுக்குள் இருந்து வெளியே அகற்ற வேண்டும்.
சிலர் காதுக்குள் புகுந்து கொண்ட பூச்சியை கொல்வதற்காக தண்ணீரில் உப்பைக் கரைத்து அந்தத் தண்ணீரை காதுக்குள் விடுவார்கள். தண்ணீரில் ஆக்சிஜன் இருப்பதால் பூச்சிகள் அவ்வளவு எளிதாக இறக்காது.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=610888922267539&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
ஒரு பேய் கதை:நள்ளிரவு நேரம். கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு பேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது. "உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது.
மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது.
"உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்."
மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்:
முதலாவது நபர் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
இரண்டாவது நபர் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
பேய் சிரித்தது.
"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"
உடனே மூன்றாவது நபர் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு
"இந்த தண்ணீரை கொண்டு வா !" என்றான்.
பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.
நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்..! என்பது தான்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=649879941701770&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1