Saturday, 7 September 2013



தமிழ்நாட்டில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 564. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் B.E சீட்கள் உள்ளன. இந்த 564 கல்லூரிகளில் 200 கல்லூரிகளில் மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு சேர்ந்து விட்டார்கள். மீதி உள்ள 354 கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகளில் 50% மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளனர். மீதி இடங்கள் காலியாக உள்ளன. இதில் உள்ள இன்னொரு கொடுமை என்னவென்றால் 80 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்க தமிழக அரசு இன்னமும் எட்டு பொறியியல் கல்லூரிகளை கட்ட அனுமதி கொடுத்து இருக்கிறது. 

இப்போதே அண்ணா பல்கலைகழகத்தில் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களை தங்கள் கல்லூரியில் சேரும் படி கட்டாயப்படுத்தவும் மூளை சலவை செய்யவும் பல்கலைகழக வாசலில் ஒரு கூட்டம் காத்துக்கொண்டு இருக்கிறது. திடீரென்று முளைக்கும் பெட்டிக்கடைகள் போல் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டால் B.E. படிப்பு ஒரு +2 படிப்பாக மாறும் அபாயம் வெகு தொலைவில் இல்லை. 15 வருடங்களுக்கு முன்னால் B.E படிப்புக்கு ஒரு மரியாதையை இருந்தது. இப்போது அந்த B.E படிப்பு மார்க்கெட்டில் விற்கும் கத்திரிக்காயாக மாறிவிட்டது.

(மாணவர்கள் சேராத கல்லூரிக் கட்டிடங்களை, அரசு தானியங்களை சேமிக்கும் கிடங்குகளாக மாற்றிவிடலாம்)


No comments:

Post a Comment