ஒரு நெகிழ்ச்சியான குட்டி கதை:
ஒரு அப்பாவும் மகனும் ரயிலில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். மகனுக்கு 25 வயது. ரயிலில் புறப்பட்ட சில நிமிஷத்திலிருந்து அந்த இளைஞன் ஜன்னலை விட்டு அசையாமல் ஆர்வமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் திடீரென்று அப்பாவிடம் திரும்பி கத்தினான்.
"அப்பா...! என்ன இது ஆச்சர்யம்? ரயில் முன்னாடி போயிட்டு இருக்கும் பொது மரங்கள் எல்லாம் பின்னாடி போயிட்டு இருக்கு...?"
அவன் அப்படி பேசியதை கேட்டு எதிர் சீட்டில் இருந்த ஒரு கணவனும் மனைவியும் சிரித்தார்கள். பையனின் அப்பாவிடம் கேலியாய் சொன்னார்கள்.
"என்ன இவ்வளவு பெரிய பையன் ஒரு சின்னக் குழந்தை மாதிரி பேசறான், நடந்துக்கிறான். மோதல்ல ஒரு நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டு போங்க."
அவர்கள் அப்படி சொன்னதை கேட்டு பையனின் அப்பா சிரித்தார்.
"நானும் என்னோட பையனும் இப்போ ஹாஸ்பிட்டலில் இருந்துதான் வர்றோம். அவனுக்கு பிறவியில் இருந்தே பார்வை இல்லை. போன வாரம் ஆபரேஷன் நடந்து மாற்று கண் பொருத்தினார்கள். பார்வை கிடைத்து விட்டது. பார்வை வந்த பிறகு அவன் பயணம் செய்யும் முதல் ரயில் பயணம் இது. அது தான் எல்லாத்தையும் ரசிச்சுகிட்டு வர்றான். அவன் அப்படி கத்துறது உங்களுக்கு தொந்தரவாய் இருந்தா அவன் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுகிறேன்."
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=590186161004482&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

No comments:
Post a Comment