நாட்டையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீதமான பிரச்சனையை யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பையும் வருத்தத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது.
.
.
.
அது என்ன பிரச்னை ? என்று கேட்கிறீர்களா ? "WORLD HEALTH ORGANIZATION" என்ற அமைப்பு சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள செல்போன் டவர்களைப் பற்றியும் அவைகள் வெளிவிடும் கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு பற்றியும் ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது அறிக்கையில் அப்படி என்னதான் உள்ளது.
செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே செல்போன் கோபுரங்களை "*அவுட் சோர்சிங்*" முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது . இதன் காரணமாக ஒரே செல்போன் டவரை 2 அல்லது 3 செல்போன் நிறுவனகள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்கத்தின் வெளிப்பாடு அதிகமாக இருக்கின்றன. "*உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது*". இந்தியா முழுவதும் 4 இலட்சத்து 50 ஆயிரம் செல்போன் டவர்கள் உள்ளன . இந்த செல்போன் டவர்கள் நகர் பகுதிகளில் நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன . ஏற்கனவே 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதம் தோறும் புதிதாக 1 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இப்போது 12 செல்போன் நிறுவனங்கள் உள்ளன . இந்த நிறுவனங்கள் நினைத்த மாத்திரத்தில் - நினைத்த இடத்தில் செல்போன் டவரை நிறுவ முடியாது. தொலை தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் "*தடை இல்லா சான்றிதல்*" பெற்ற பிறகே செல்போன் டவர்கள் அமைக்க படுகின்றன. மேலும் சர்வதேச விதி முறைகளின் படி செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக் வீச்சின் அளவு கட்டுப்படுத்த பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இந்தியாவில் அவைகள் சரி வர கடை பிடிக்கப்படுவது இல்லை. இதனால் மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகிகொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் இந்தியா உடனடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று "WHO" சொல்லியுள்ளது .
* இந்தியாவில் இப்போது உள்ள இந்த நிலைமை மாறவேண்டுமானால் மிக குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆண்டேனாக்களை நிறுவலாம்.
* அந்த ஆண்டெனாக்கள் 2 மீட்டர் உயரம் மட்டும் இருக்கவேண்டும். அவைகள் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுவப்பட வேண்டியது முக்கியம் .
* செல்போன் நிறுவனம் விதிமுறைகளை மீறினால் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் .
* மேலும் வெளிநாடுகில் எல்லாம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மற்றும் படுக்குமாடி குரியிருப்புகள் உள்ள பகுதி , பள்ளி , கல்லூரிகள் , மருத்துவமனைகள் உள்ள பகுதிகில் செல்போன் டவர்கள் அமைக்க படுவது இல்லை. அது போன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக நம் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும்
தற்போது செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வுயர்ந்து கொண்டே போகிறது . ஒரே நபர் இரண்டுக்கும் மேற்ப்பட்ட செல்போன்களை வைத்துள்ளார். இது தேவையற்ற ஒன்று. செல்போன் ஒரு அற்புதமான விஷயம். அது தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே தவிர அரட்டையடிப்பு வம்பளப்புக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூடிய வரைக்கும் பேச்சை குறைத்து "SMS" அனுப்பலாம். நீண்ட நேரம் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் லேண்ட் லைனை பயன் படுத்தலாம்.
மக்கள் மனசு வைத்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=607913845898380&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

No comments:
Post a Comment