Friday, 6 September 2013


அனந்த விகடனில் நீங்கள் எழுதிய "இனி மின்மினி" தொடர்கதையில் வரும் "சைனோ பாக்" எனப்படும் பாக்டீரியா வெடிகுண்டு உங்கள் கற்பனையா இல்லை உண்மையா..?


உண்மைதான் ..!, 

விஞ்ஞானம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில் போரில் பயன்படுத்துவதற்காக வித விதமான நவீன ஆயுதங்கள் உருவாகிவருகின்றன.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரபல ஜோதிடர் "நாஸ்டர் டாம்ஸ்" எதிர்கால போர் முறைகள் எப்படி இருக்கும் என்று கணித்த போது ஒளியையும் காற்றையும் எதிர்காலத்தில் போரின் போது ஆயுதமாக பயன்படுத்துவார்கள் என்று கூறி இருக்கிறார். இப்போது வளர்ந்து வரும் நவீன விஞ்ஞானமும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களை தயாரித்து வருகின்றது.

அண்மையில் அமெரிக்கா ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை கண்டு பிடித்துள்ளது. ஆனால்அது ஒரு போர் ஆயுதம் என்று சொல்ல விரும்பாத அமெரிக்கா. "அது ராணுவ வீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி" என்று அறிவித்தது.

இதே போல் விதவிதமான நவீன ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்து இருப்பது தான் "சைனோ பாக்" எனப்படும் பாக்டீரியா வெடிகுண்டு.

பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுர். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒருவகை பாக்டீரியாக்களில் சிறய மாற்றங்களை ஏற்படுத்தி சில நாடுகள் பெட்ரோல் தயாரித்து கொண்டிருந்தார்கள். இதே சைனோ பாக்டீரியாவில் வேறு சில மாற்றங்களை ஏற்படுத்தினால் அது வெடிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. அதாவது "சைனோ பாக்" பாக்டீரியாவோடு "பாக்டீரியா பேஜ்" எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாக்களின் ஜீன்களை சேர்த்தால் அது ஒரு சில மணி நேரங்களிலேயே பல்கி பெருகி, ஒரு வெடிகுண்டின் வீரியத்தைப் பெற்று விடுகிறது. இந்த பாக்டீரியாக்களை உணவிலோ குடிநீரிலோ ஒரு சிறிய அளவு கலந்து விட்டால் போதும். அது மனித உடலுக்குள் சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து இதயப் பகுதியை அடைந்ததும் அந்த பாக்டீரியாக்கள் இதயத்தின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு ஒரு கெட்ட நேரம் பார்த்து வெடித்து இதயத்தை சின்னச் சின்ன சதை துணுக்குகளாய் சிதறடிக்கும். இது மாதிரியான கிருமி ஆயுதங்களுக்கு "BIO - WEAPON" என்று பெயர். எதிர் காலத்தில் மூன்றாவது உலகப் போர் மூண்டால் இந்த "BIO-WEAPON" கள் தான் மிகப் பெரிய அழிவை உண்டாக்கும்.



Visit: Crime Novel - Rajeshkumar

https://www.facebook.com/photo.php?fbid=592260324130399&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

No comments:

Post a Comment