இன்னமும் தெளிவாய் சொல்லணும்ன்னா கிரீன்விச்சில் பகல் 3:00 மணியாய் இருந்தால் அதோடு 5:30 மணி நேரத்தை கூட்டும் பொது வரும் 8:30 தான் இந்தியாவின் நேரம். இந்த நேரத்தை தான் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் கடை பிடிக்க வேண்டும். ரேடியோ, டி.வி, அரசு அலுவலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மணிக் கூண்டுகள், நம் மணிக்கட்டில் கட்டப் பட்ட வாட்சுகள் இப்படி எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் இதை தான் IST அதாவது INDIAN STANDARD TIME என்று சொல்கிறோம். இந்த IST இருப்பதால் தான் அரசு நிர்வாகம் குழப்பம் இல்லாமல் செயல்பட முடிகிறது.
இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும் நேரம் ஒரே மாதிரியாய் இருப்பது இல்லை. கொல்கத்தாவில் சூரிய உதயம் 5:30 மணிக்கே தெரியும். அதே சூரிய உதயம் மும்பையில் 6:00 மணிக்கு தான் தெரியும். நாக்பூரில் பகல் 12 மணி என்றால் கோவையில் 11:30 மணி. பொதுவாக IST என்று ஒன்று இல்லாவிட்டால் நாட்டின் ஒட்டு மொத்த பணிகளும் நேர வித்தியாசம் காரணமாய் சீர் குலைந்துவிடும் என்ற பயத்தின் காரணமாய் மனிதன் உருவாக்கி கொண்டது தான் இந்த நேரம்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=607447039278394&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
No comments:
Post a Comment