Saturday, 7 September 2013

இறைவன் மீது நாம் வைக்கும் பக்தியானது எப்படி இருக்க வேண்டும்...?

எப்போதோ எங்கேயோ படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அதை சொல்கிறேன். உங்களுடைய கேள்விக்கு பொருந்துகிறதா என்று பாருங்கள். ஒரு பூனை அல்லது புலி தன் குட்டியை வாயில் கவ்வியபடி எடுத்து செல்வதை நாம் பார்க்கிறோம். அந்த நிலைமையில் குட்டிகள் எந்த வித கவலையும் இன்றி அமைதியாய் - பாதுகாப்பாய் இருக்கின்றன. அந்த குட்டிகளுக்கு தெரியும் - இரையை கடித்து குதறும் தன் அன்னையின் பற்கள் நம்மை ஒன்றும் செய்யாது என்று. இப்படி பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் இறைவன் மீது வைக்க வேண்டும். நம்முடைய செயல்களுக்கு ஏற்ப இறைவன் பலன் தருகிறான். செயல்கள் நமதாக இருந்த போதிலும் அதன் பலன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் தகுதி இறைவனுக்கே உள்ளது என்று நாம் உணர வேண்டும்.


Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=607041275985637&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

No comments:

Post a Comment