Saturday, 7 September 2013



தமிழ்நாட்டில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 564. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் B.E சீட்கள் உள்ளன. இந்த 564 கல்லூரிகளில் 200 கல்லூரிகளில் மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு சேர்ந்து விட்டார்கள். மீதி உள்ள 354 கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகளில் 50% மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளனர். மீதி இடங்கள் காலியாக உள்ளன. இதில் உள்ள இன்னொரு கொடுமை என்னவென்றால் 80 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்க தமிழக அரசு இன்னமும் எட்டு பொறியியல் கல்லூரிகளை கட்ட அனுமதி கொடுத்து இருக்கிறது. 

இப்போதே அண்ணா பல்கலைகழகத்தில் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களை தங்கள் கல்லூரியில் சேரும் படி கட்டாயப்படுத்தவும் மூளை சலவை செய்யவும் பல்கலைகழக வாசலில் ஒரு கூட்டம் காத்துக்கொண்டு இருக்கிறது. திடீரென்று முளைக்கும் பெட்டிக்கடைகள் போல் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டால் B.E. படிப்பு ஒரு +2 படிப்பாக மாறும் அபாயம் வெகு தொலைவில் இல்லை. 15 வருடங்களுக்கு முன்னால் B.E படிப்புக்கு ஒரு மரியாதையை இருந்தது. இப்போது அந்த B.E படிப்பு மார்க்கெட்டில் விற்கும் கத்திரிக்காயாக மாறிவிட்டது.

(மாணவர்கள் சேராத கல்லூரிக் கட்டிடங்களை, அரசு தானியங்களை சேமிக்கும் கிடங்குகளாக மாற்றிவிடலாம்)


*சூரிய ஒளி மூலம் மின்சாரம் தங்கு தடையின்றிப் பெறலாம் என்று தெரிந்த பின்பும் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் ஏன் இன்னமும் தாமதம்?


**அதற்க்கு ஆகும் செலவு தான் காரணம். சூரிய ஒளியை உள் வாங்கும் தகடு, அந்த ஒளியை மின்சாரமாக மற்றும் மோட்டார், மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கு ஆகும் மொத்த செலவு ஒரு இலட்சத்திலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய். ஒரே ஒரு முறை இந்த செலவை செய்து விட்டால் அடுத்த 20 முதல் 25 வருடங்கள் வரை அந்த யூனிட் வேலை செய்யும். இந்தியா ஒரு வெப்ப நாடாக இருப்பதால் 365 நாட்களில் 300 நாட்கள் சூரிய வெளிச்சம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 500 வாட் முதல் 1000 வாட் வரை மின்சாரம் கிடைக்கும். இந்த 1000 வாட் மின்சாரத்தை வைத்துக் கொண்டு A.C, கம்ப்யூட்டர், டி.வி, பிரிட்ஜ், மிக்சி, வாஷிங்மெசின் என்று சகலதையும் இயக்கலாம். 20 வருடங்களுக்கு மின்சார கட்டணமும் கிடையாது. பவர் கட்டும் கிடையாது.


Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=608338712522560&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
இறைவன் மீது நாம் வைக்கும் பக்தியானது எப்படி இருக்க வேண்டும்...?

எப்போதோ எங்கேயோ படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அதை சொல்கிறேன். உங்களுடைய கேள்விக்கு பொருந்துகிறதா என்று பாருங்கள். ஒரு பூனை அல்லது புலி தன் குட்டியை வாயில் கவ்வியபடி எடுத்து செல்வதை நாம் பார்க்கிறோம். அந்த நிலைமையில் குட்டிகள் எந்த வித கவலையும் இன்றி அமைதியாய் - பாதுகாப்பாய் இருக்கின்றன. அந்த குட்டிகளுக்கு தெரியும் - இரையை கடித்து குதறும் தன் அன்னையின் பற்கள் நம்மை ஒன்றும் செய்யாது என்று. இப்படி பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் இறைவன் மீது வைக்க வேண்டும். நம்முடைய செயல்களுக்கு ஏற்ப இறைவன் பலன் தருகிறான். செயல்கள் நமதாக இருந்த போதிலும் அதன் பலன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் தகுதி இறைவனுக்கே உள்ளது என்று நாம் உணர வேண்டும்.


Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=607041275985637&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் வெவ்வேறு டிகிரி கோணங்களில் இருக்க இந்த கிரீன்விச் நகரம் மட்டும் "000" ரேகாம்சம் என்கிற டிகிரி கோணத்தில் அமைஞ்சிருக்கு கிரீன்விச் நகரம் பூமி உருண்டையின் மையப் பகுதியில் இருக்கிறதால இந்த நகரத்திற்கு கிழக்கு பக்கம் உள்ள நாடுகள் 1 டிகிரி(4 நிமிடங்கள்) குறைச்சும் மற்றும் மேற்காக உள்ள நாடுகள் 4 நிமிடங்கள் என்று கூட்டியும் நேரத்தை நிர்ணயம் பண்ணி அதை ஸ்டேண்டர்ட் நேரமாய் மாத்தியிருக்கு. அதன் படி பார்த்த நம்ம இந்தியா கிரீன்விச் நகரத்தில் இருந்து 82.30 என்கிற டிகிரி கோணத்தில் இருக்கு. இரு டிகிரிக்கு 4 நிமிடம் என்று கணக்கு பார்த்தால் 328 நிமிடம் வித்தியாசப்படுது. அதாவது கிரீன்விச் நேரத்துக்கும் இந்தியாவோட நேரத்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5:30 மணி நேரம்.



இன்னமும் தெளிவாய் சொல்லணும்ன்னா கிரீன்விச்சில் பகல் 3:00 மணியாய் இருந்தால் அதோடு 5:30 மணி நேரத்தை கூட்டும் பொது வரும் 8:30 தான் இந்தியாவின் நேரம். இந்த நேரத்தை தான் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் கடை பிடிக்க வேண்டும். ரேடியோ, டி.வி, அரசு அலுவலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மணிக் கூண்டுகள், நம் மணிக்கட்டில் கட்டப் பட்ட வாட்சுகள் இப்படி எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் இதை தான் IST அதாவது INDIAN STANDARD TIME என்று சொல்கிறோம். இந்த IST இருப்பதால் தான் அரசு நிர்வாகம் குழப்பம் இல்லாமல் செயல்பட முடிகிறது.

இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும் நேரம் ஒரே மாதிரியாய் இருப்பது இல்லை. கொல்கத்தாவில் சூரிய உதயம் 5:30 மணிக்கே தெரியும். அதே சூரிய உதயம் மும்பையில் 6:00 மணிக்கு தான் தெரியும். நாக்பூரில் பகல் 12 மணி என்றால் கோவையில் 11:30 மணி. பொதுவாக IST என்று ஒன்று இல்லாவிட்டால் நாட்டின் ஒட்டு மொத்த பணிகளும் நேர வித்தியாசம் காரணமாய் சீர் குலைந்துவிடும் என்ற பயத்தின் காரணமாய் மனிதன் உருவாக்கி கொண்டது தான் இந்த நேரம்.



Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=607447039278394&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
நாட்டையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீதமான பிரச்சனையை யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பையும் வருத்தத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது.
.
.
.
அது என்ன பிரச்னை ? என்று கேட்கிறீர்களா ? "WORLD HEALTH ORGANIZATION" என்ற அமைப்பு சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள செல்போன் டவர்களைப் பற்றியும் அவைகள் வெளிவிடும் கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு பற்றியும் ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது அறிக்கையில் அப்படி என்னதான் உள்ளது.



செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே செல்போன் கோபுரங்களை "*அவுட் சோர்சிங்*" முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது . இதன் காரணமாக ஒரே செல்போன் டவரை 2 அல்லது 3 செல்போன் நிறுவனகள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்கத்தின் வெளிப்பாடு அதிகமாக இருக்கின்றன. "*உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது*". இந்தியா முழுவதும் 4 இலட்சத்து 50 ஆயிரம் செல்போன் டவர்கள் உள்ளன . இந்த செல்போன் டவர்கள் நகர் பகுதிகளில் நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன . ஏற்கனவே 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதம் தோறும் புதிதாக 1 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இப்போது 12 செல்போன் நிறுவனங்கள் உள்ளன . இந்த நிறுவனங்கள் நினைத்த மாத்திரத்தில் - நினைத்த இடத்தில் செல்போன் டவரை நிறுவ முடியாது. தொலை தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் "*தடை இல்லா சான்றிதல்*" பெற்ற பிறகே செல்போன் டவர்கள் அமைக்க படுகின்றன. மேலும் சர்வதேச விதி முறைகளின் படி செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக் வீச்சின் அளவு கட்டுப்படுத்த பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இந்தியாவில் அவைகள் சரி வர கடை பிடிக்கப்படுவது இல்லை. இதனால் மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகிகொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் இந்தியா உடனடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று "WHO" சொல்லியுள்ளது .

* இந்தியாவில் இப்போது உள்ள இந்த நிலைமை மாறவேண்டுமானால் மிக குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆண்டேனாக்களை நிறுவலாம்.
* அந்த ஆண்டெனாக்கள் 2 மீட்டர் உயரம் மட்டும் இருக்கவேண்டும். அவைகள் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுவப்பட வேண்டியது முக்கியம் .
* செல்போன் நிறுவனம் விதிமுறைகளை மீறினால் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் .
* மேலும் வெளிநாடுகில் எல்லாம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மற்றும் படுக்குமாடி குரியிருப்புகள் உள்ள பகுதி , பள்ளி , கல்லூரிகள் , மருத்துவமனைகள் உள்ள பகுதிகில் செல்போன் டவர்கள் அமைக்க படுவது இல்லை. அது போன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக நம் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும்

தற்போது செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வுயர்ந்து கொண்டே போகிறது . ஒரே நபர் இரண்டுக்கும் மேற்ப்பட்ட செல்போன்களை வைத்துள்ளார். இது தேவையற்ற ஒன்று. செல்போன் ஒரு அற்புதமான விஷயம். அது தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே தவிர அரட்டையடிப்பு வம்பளப்புக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூடிய வரைக்கும் பேச்சை குறைத்து "SMS" அனுப்பலாம். நீண்ட நேரம் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் லேண்ட் லைனை பயன் படுத்தலாம்.

மக்கள் மனசு வைத்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.



Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=607913845898380&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

Friday, 6 September 2013

Rajesh kumar's Crime Novels List:
1500 க்கும் மேற்ப்பட்ட நாவல்களில் சில Part - 1:

1.வினையா ஒரு விடுகதை
2.காகிதப்புலிகள் 
3."L" போர்ட் மர்டர்
4.முதல் தீக்குச்சி 
5.வாஷிங்டனில் விவேக்
6.ஒரு கோடி ராத்திரிகள் 
7.விவேக் விஷ்ணு வெற்றி 
8.இனி ராகினி 
9.விவேக்கும் 48-நிமிஷங்களும்
10.மண்டே மர்டர் டே
11.விவேக் விஸ் விவேக்
12.நந்தினி நாளை இறக்கிறாள்
13.இந்தியனாய் இரு
14இந்தியன் என்பது என் பேரு
15.இந்திய விற்பனைக்கு அல்ல
16.ஊதா நிறத் தீவு
17.ஜனவரியின் ஞாயிற்று கிழமை
18.5 கிராம் ஆபத்து
19.தீப்பந்தம் எடு ! தீமையை சுடு !
20.சத்தமில்லாத சமுத்திரம்
21.சொர்க்கத்தின் சாவி
22.இடி மின்னல் இந்திரா
23.அக்மார்க் மர்டர்
24.பாதிராஜ்யம்
25.ஒரு நாள் ராஜாக்கள்
26.வேட்டையாடு விவேக்
27.புதைத்து வைத்த நிலா
28.8 வர்ண வானவில்
29.சிவப்புத் தென்றல்
30.ஒரு நதி ஒரு பௌர்ணமி ஒரு பெண்மணி
31.சிவப்பு நவம்பர்
32.நவம்பர் நள்ளிரவு நர்மதா
33.ராணிக்கு செக்
34.விவேக் விடிவதற்குள் வா
35.விடாதே விடாதே விவேக்
36.சயனைட் புன்னகை
37.என் இனிய இன்னலே
38.நள்ளிரவுச் செய்தி
39.ஆகஸ்ட் 5 அதிகாலை
40.கண்ணாலே கொள்ளாதே
41.தித்திக்கும் தீ
42.வெல்வெட் கில்லர்
43.வெல்வெட் குற்றம்
44.மற்றவை நள்ளிரவு 1.05'க்கு
45.திகில் திருவிழா
46.தொட்டவனை விட்டதில்லை
47.தவணைமுறையில் மரணம்
48.நிஷா நிஷா ஓடிவா
49.தூங்காத தோட்டாக்கள்
50.உதடுகள் சுடும்.

51.அந்தமான் அபாயம்
52.இரத்தத்தில் ஒரு கேள்விக் குறி
53.மஞ்சள் டயரி
54.ஓடாதே ஒளியாதே
55.எங்கும் விவேக் எதிலும் விவேக்
56.திசை தேடும் பறவை
57.இரத்தக்கறை தோட்டாக்கள்
58.பார்ஸ்ட் பிளைட் டு பாரீஸ்
59.சத்தமில்லாமல் ஒரு சத்தம்
60.சிவப்பு உடை தேவதை
61.மாகா சதி
62.ஒரு சனிக்கிழமை இரவு
63.தூங்காத கன் ஒன்று
64.இராஜரகசியம்
65.அபாய நோயாளி
66.இருப்பது நீ இறப்பது நான்
67.2000 சதுர அடி சொர்க்கம்
68.சத்தமில்லாமல் இரத்தமில்லாமல்
69.சிவப்பை சில கனவுகள்
70.உன்னோடு ஒரு நாள்
71.5-ம் பிறை
72.4-வது குரங்கு
73.நான் நளினா நள்ளிரவு
74.உச்சி நிலா
75.7-வது அறிவு
76.இரவே இரவே விடியாதே
77.அதே நிலா அதே கலா
78.கிழக்கு செவக்கையிலே
79.பஞ்சவர்ண கொலைகள்
80.தப்பு தப்பாய் ஒரு கொலை
81.சூரியனை திருடு
82.காகித பூ தேன்
83.இருட்டில் வைத்த குறி
84.பணம், பதவி பலி
85.ஆபத்துக்கு பாவமுண்டு
86.நெஞ்செல்லாம் நெருஞ்சிமுள்
87.கடலோர கொலைகள்
88.ஒற்றை மேகம்
89.லேகா என் லேகா
90.கண்ணில் அடிக்குது மின்னல்
91.நள்ளிரவுச் செய்தி
92.திக் திக் திலகா
93.எடு ஆயுதம்
94.கருப்பு இரத்தம்
95.ரோஜாமுள் துரோகம்
96.மாண்டவன் கட்டளை
97.காற்றின் நிறம் கருப்பு
98.கையில் சிக்கிய மின்னல்
99.கருப்பு வானவில்
100.இரவுத் தாமரை


Visit: Crime Novel - Rajeshkumar

அனந்த விகடனில் நீங்கள் எழுதிய "இனி மின்மினி" தொடர்கதையில் வரும் "சைனோ பாக்" எனப்படும் பாக்டீரியா வெடிகுண்டு உங்கள் கற்பனையா இல்லை உண்மையா..?


உண்மைதான் ..!, 

விஞ்ஞானம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில் போரில் பயன்படுத்துவதற்காக வித விதமான நவீன ஆயுதங்கள் உருவாகிவருகின்றன.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரபல ஜோதிடர் "நாஸ்டர் டாம்ஸ்" எதிர்கால போர் முறைகள் எப்படி இருக்கும் என்று கணித்த போது ஒளியையும் காற்றையும் எதிர்காலத்தில் போரின் போது ஆயுதமாக பயன்படுத்துவார்கள் என்று கூறி இருக்கிறார். இப்போது வளர்ந்து வரும் நவீன விஞ்ஞானமும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களை தயாரித்து வருகின்றது.

அண்மையில் அமெரிக்கா ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை கண்டு பிடித்துள்ளது. ஆனால்அது ஒரு போர் ஆயுதம் என்று சொல்ல விரும்பாத அமெரிக்கா. "அது ராணுவ வீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி" என்று அறிவித்தது.

இதே போல் விதவிதமான நவீன ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்து இருப்பது தான் "சைனோ பாக்" எனப்படும் பாக்டீரியா வெடிகுண்டு.

பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுர். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒருவகை பாக்டீரியாக்களில் சிறய மாற்றங்களை ஏற்படுத்தி சில நாடுகள் பெட்ரோல் தயாரித்து கொண்டிருந்தார்கள். இதே சைனோ பாக்டீரியாவில் வேறு சில மாற்றங்களை ஏற்படுத்தினால் அது வெடிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. அதாவது "சைனோ பாக்" பாக்டீரியாவோடு "பாக்டீரியா பேஜ்" எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாக்களின் ஜீன்களை சேர்த்தால் அது ஒரு சில மணி நேரங்களிலேயே பல்கி பெருகி, ஒரு வெடிகுண்டின் வீரியத்தைப் பெற்று விடுகிறது. இந்த பாக்டீரியாக்களை உணவிலோ குடிநீரிலோ ஒரு சிறிய அளவு கலந்து விட்டால் போதும். அது மனித உடலுக்குள் சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து இதயப் பகுதியை அடைந்ததும் அந்த பாக்டீரியாக்கள் இதயத்தின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு ஒரு கெட்ட நேரம் பார்த்து வெடித்து இதயத்தை சின்னச் சின்ன சதை துணுக்குகளாய் சிதறடிக்கும். இது மாதிரியான கிருமி ஆயுதங்களுக்கு "BIO - WEAPON" என்று பெயர். எதிர் காலத்தில் மூன்றாவது உலகப் போர் மூண்டால் இந்த "BIO-WEAPON" கள் தான் மிகப் பெரிய அழிவை உண்டாக்கும்.



Visit: Crime Novel - Rajeshkumar

https://www.facebook.com/photo.php?fbid=592260324130399&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
WHAT IS CRIME NOVEL:
.
A) கதை - இது பொழுது போக்கிற்கான கற்பனை கதைகள் அல்ல. பொது அறிவிற்கான பாடப்புத்தகம். அறிவியல் முதல் அரசியல் வரை அனைத்தும் உண்மையே.

B) அர்த்தமுள்ள அரட்டை: குட்டி உரையாடலில் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு (அறிவியல்) செய்தி.

C) கோயமுத்தூரிலிருந்து ட்ரங்-கால்/பேக்ஸ் - நாட்டிற்கு ஒரு சாட்டை அடி. 

D) ராஜேஷ் குமாரிடம் கேளுங்கள்/ விளக்கம் பிளீஸ் விவேக் - வாசகர்களின் கேள்விக்கு பதில் மற்றும் அறிவுரை.

E) ஒவ்வொரு அத்தியாயத்திற்கு இடையில் ஒரு பொது அறிவு.


Visit: Crime Novel - Rajeshkumar

திரு ராஜேஷ்குமார் அவர்கள் விவேகானந்தரின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக தனது கதையில் வரும் கதை நாயகனுக்கு விவேக் என்று பெயர் சூட்டியுள்ளார். விவேக் அவர்கள் நாட்டுப் பற்று உள்ளவராகவும், நேர்மையாகவும், அநீதிகளை எதிர்ப்பவராகவும் மற்றும் குற்றவாளிகளை மிகத்திறமையான வழியில் கண்டுபிடித்து சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கிதருபவராகவும் இருப்பார். இவருடைய மனைவியின் திருமதி ரூபலா. இவருடன் குறும்புகார உதவியாளர் விஷ்ணு மற்றும் அனுபவம் வாய்ந்த இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் உள்ளனர்.

மற்றொரு கதை நாயகர்கள் நவநீத கிருஷ்ணன் மற்றும் அவினாஷ். இவர்களும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள்.




Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=578271272195971&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
Rajesh Kumar is an extremely prolific Tamil writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.[1][2]
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. 


He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.


Source: wiki


Visit: Crime Novel - Rajeshkumar

https://www.facebook.com/photo.php?fbid=578271272195971&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater