Tuesday, 17 December 2013

நான் 100% இறைவனை நம்புபவன் எல்லா மதங்களும் ஒன்று என்று நினைப்பவன். 

மக்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்து என்று மதங்களால் வேறுபடலாம். சிவன், விஷ்ணு, அல்லா, இயேசு என்ற திருநாமங்களில் கடவுள் வழிபாடு செய்யலாம். 

ஆனால் இறைவன் என்பவன் ஒருவனே ! அவனுடைய உறைவிடம் நமது உள்ளமே என்று புரிந்து கொண்டால் நாம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு இருக்கலாம்.


Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=610893942267037&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு கட்சியும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை ஆக்கப் பூர்வமாக வெளியிட வேண்டும். வாக்களர்களுக்கு இலவசப் பொருட்கள் எதையும் வழங்க கூடாது. இலவசப் பொருட்கள் மக்களை சோம்பேறிகளாய் மாற்றுவதால் மனித சக்தி வீணாகிறது. 

எந்த நாட்டில் மனித உழைப்பு இல்லையோ அந்த நாடு ஒரு போதும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாது.

:-Rajeshkumar (அர்த்தமுள்ள அரட்டை)


Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=626796570676774&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
65 வயது நிரம்பிய ஒரு முதியவரிடம்
"உங்களின் வயது எவ்வளவு?" ஒருவர் கேட்டார்.

அதற்க்கு அந்த முதியவர்,
"என்னுடைய வயது 5" என்று சொன்னார்.

கேள்வி கேட்டவர் திகைத்துப் போய்,
"உங்களுக்கு வயது 65 என்று கேள்விப்பட்டேன். 5 வயது என்று சொல்கிறீர்கள். ஏன்?"
என்று கேட்டார்.

அதற்க்கு அந்த முதியவர்
"நான் 60 ஆண்டுகளாக மோசமான வழிகளில் பொருள் சேர்த்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்தேன். இந்த 5 ஆண்டுகள்தான் உண்மையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்.
நான் உண்மையாக வாழ்ந்த அந்த 5 ஆண்டுகளைதான் எனது வயதாகக் கூறினேன்." என்றார்.



Visit: Crime Novel - Rajeshkumar

https://www.facebook.com/photo.php?fbid=652673788089052&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

இரண்டாவது உலகப் போரில் 60 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டார்கள். 
அவர்களின் நினைவாக இஸ்ரேலில் ஒவ்வொருவர்க்கும் ஒரு மரம் நட்டு, ஒரு பெரிய வனப்பகுதியையே உருவாக்கியிருக்கிறார்கள். 

பெரியவர்களின் நினைவாக 45 லட்சம் பைன் மரங்களும், 
குழந்தைகளின் நினைவாக 15 லட்சம் சைப்ரஸ் மரங்களும் 
நடப்பட்டு இருக்கின்றன. 

60 லட்சம் மக்கள் இந்த 2013-லும் அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் 
- மரங்களாக..!

Visit: Crime Novel - Rajeshkumar
யாரைப் பார்த்தாலும் ஒரு பிரச்சனையோடு இருக்கிறார்கள், பிரச்சனையில்லாமல் சந்தோசமாக வாழ என்ன வழி ?

சந்தோசமாக வாழ முயற்சி செய்யாமல், 
நிம்மதியாய் வாழ முயற்சி செய்தால் போதும்
வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழலாம்.

Visit: Crime Novel - Rajeshkumar

அதிர்ச்சியான புள்ளி விபரம்:

தமிழ்நாட்டில் நூலகங்களைக் காட்டிலும் டாஸ்மாக் கடைகள் அதிகம் இருக்கிறது.
டாஸ்மாக் 4000 க்கு மேல், நூலகங்கள் 3000 க்கு கீழ் 

இளைய சமுதாயம் குடிக்குமா...? இல்லை, படிக்குமா..?


Visit: Crime Novel - Rajeshkumar
பூமியின் நிலபரப்பு 23% ஆனால் நீர்பரப்போ 77%. 

இந்த நீர் பரப்பில் 97% குடிக்க பயன்படாத கடல் நீர்.
மீதி உள்ள 3% நீர்தான் மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பயன்படுகிறது. 

தற்போதைய புள்ளி நிலவரப் படி உலக நாடுகளுக்கு 5% குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் இருப்பதோ 3% தண்ணீர் தான். பருவகாலங்களில் பெய்யும் மழையால் பெரும்பாலான நாடுகள் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்கின்றன. 

இந்த நீரின் அளவு குறையும் போது அண்டை நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Visit: Crime Novel - Rajeshkumar