Tuesday, 17 December 2013


அதிர்ச்சியான புள்ளி விபரம்:

தமிழ்நாட்டில் நூலகங்களைக் காட்டிலும் டாஸ்மாக் கடைகள் அதிகம் இருக்கிறது.
டாஸ்மாக் 4000 க்கு மேல், நூலகங்கள் 3000 க்கு கீழ் 

இளைய சமுதாயம் குடிக்குமா...? இல்லை, படிக்குமா..?


Visit: Crime Novel - Rajeshkumar
பூமியின் நிலபரப்பு 23% ஆனால் நீர்பரப்போ 77%. 

இந்த நீர் பரப்பில் 97% குடிக்க பயன்படாத கடல் நீர்.
மீதி உள்ள 3% நீர்தான் மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பயன்படுகிறது. 

தற்போதைய புள்ளி நிலவரப் படி உலக நாடுகளுக்கு 5% குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் இருப்பதோ 3% தண்ணீர் தான். பருவகாலங்களில் பெய்யும் மழையால் பெரும்பாலான நாடுகள் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்கின்றன. 

இந்த நீரின் அளவு குறையும் போது அண்டை நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Visit: Crime Novel - Rajeshkumar
இரவில் குழந்தைகள் படுத்து தூங்கும் போது பெரிய சைஸ் எறும்புகள், சிறிய வண்டுகள், பறக்கும் ஈசல்கள் போன்றவை அவர்களின் காதுக்குள் புகுந்து கொண்டு வெளியே வர முடியாமல் தத்தளிக்கும். குழந்தைகள் அந்த இம்சை தங்காமல் வீரிட்டு அழ ஆரம்பித்துவிடும். குழந்தைகளின் காதுகளில் பூச்சிகள் புகுந்து கொண்டால் நாம் செய்ய வேண்டிய முதல் வேலை அந்த பூச்சிகளை கொல்ல வேண்டியது தான். அதற்க்கு முதலில் குழந்தையின் காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெயை விட வேண்டும். எண்ணெய் காதுக்குள் போனதும் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் அந்தப் பூச்சிகள் உடனே இறந்து விடும். அதற்க்கு பிறகு குழந்தையை டாக்டரிடம் கூடிப் போய் இறந்த பூச்சியை காதுக்குள் இருந்து வெளியே அகற்ற வேண்டும்.

சிலர் காதுக்குள் புகுந்து கொண்ட பூச்சியை கொல்வதற்காக தண்ணீரில் உப்பைக் கரைத்து அந்தத் தண்ணீரை காதுக்குள் விடுவார்கள். தண்ணீரில் ஆக்சிஜன் இருப்பதால் பூச்சிகள் அவ்வளவு எளிதாக இறக்காது.



Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=610888922267539&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
*இந்தியாவில் உள்ள ஏழை-பணக்காரர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள ஏழை-பணக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

**எந்த வித்தியாசமும் இல்லை.
ஏழைகள்: எந்த நாட்டில் இருந்தாலும் உணவை தேடுகிறார்கள்.
பணக்காரர்கள்: எந்த நாட்டில் இருந்தாலும் பசியை தேடுகிறார்கள்.









Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=626800527343045&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1

வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம்..
ஆனால்
அவைதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை இனிமையுள்ளதாக மாற்றும்!

Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=646827622007002&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
ஒரு பேய் கதை:

நள்ளிரவு நேரம். கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு பேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது. 
"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது.

மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது.

"உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்."

மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்:

முதலாவது நபர் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.

இரண்டாவது நபர் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.


பேய் சிரித்தது.
"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"


உடனே மூன்றாவது நபர் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு
"இந்த தண்ணீரை கொண்டு வா !" என்றான்.


பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.



நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்..! என்பது தான்.



Visit: Crime Novel - Rajeshkumar

https://www.facebook.com/photo.php?fbid=649879941701770&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
*பணம் பத்தும் செய்யும் என்பது உண்மையா..?


**அது ஒரு பழமொழி. அவ்வளவுதான்!

உண்மையான நிலவரம் அப்படி இல்லை. ஒரு பெரிய பணக்காரர் எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் ஒரு நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால் அது அவரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வாலை ஆட்ட வேண்டும் என்றால் அவர் அந்த நாயிடம் அன்பு செலுத்தியாக வேண்டும்.










Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=649882508368180&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1