Rajeshkumar a Tamil writter from Coimbatore, Tamil Nadu and The king of pocket novels as science, detective and crime novels.
For More...
https://www.facebook.com/CrimeNovelRajeshkumar
Sunday, 26 January 2014
ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் "செர்னோபில்" அணுமின் நிலையம் இருந்தது. 27 வருடங்களுக்கு முன்னால் அந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாய் கடுமையான கதிர் வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. உடனே மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறி பல கிலோ மீட்டர்க்கு அப்பால் போய்விட, அணுமின் நிலையத்திலிருந்து வெளிப்பட்ட கதிர் வீச்சு பக்கத்தில் இருந்த காட்டு பகுதியை பதம் பார்த்தது. கதிர் வீச்சின் பாதிப்பால் பச்சை இலைகள் மெல்ல மெல்ல அதன் நிறத்தில் இருந்து சிவப்பாக மாறிவிட்டது. மரங்கள் மட்டுமல்ல பாறைகளும் பழுப்பு நிறத்திலிருந்து சிவப்பாக மாறிவிட்டது. இப்போது 10 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அந்த காடு "சிவப்பு" நிறத்தில் உள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த எண்ணெய் "தேங்காய் எண்ணெய்" தான்.
சொன்னது நம் நாட்டு உணவியல் விற்பன்னர்கள் அல்ல அமெரிக்காவில் உள்ள விற்பன்னர்கள்.
இதை நம் உணவில் சேர்த்தால் உடலில் கொலஸ்ட்ரால் கூடி அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் ஏற்படும் என்பது உண்மையல்ல. தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான "சூப்பர் ஸ்டார்" என்று உறுதியாக சொல்லும் அமெரிக்கா, தேங்காய் எண்ணையை பெருமளவில் இறக்குமதி செய்கிறது. காரணம் தேங்காய் எண்ணெய்யில் மோனோலாரின் என்ற மருத்துவ குணமுள்ள சத்து பொருள் உள்ளது. "மோனோலாரின்" என்பது லாரிக் அமிலம். இந்த லாரிக் அமிலம் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்தபடியாக தாய்பாலில் தான் உள்ளது.
விளம்பர மீடியாக்களை சார்ந்தவர்கள், இந்தியாவில் கருப்பாக இருப்பதே பாவம் என்பது போல் விளம்பரங்களில் சித்தரித்து, "ஒரே வாரத்தில் கருப்பு நிறத்தில் இருந்து விடுபட்டு சிவப்பழகுக்கு மாறுங்கள்" என்று ஏகப்பட்ட முகக் கிரீம்கள் சந்தையில் இறங்கிவிட்டன. ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ கருப்பாக இருந்தால் அது அவர்கள் ஜீன் சம்பத்தப்பட்டது. இயற்கையாய் அமைந்து விட்ட கருப்பு நிறத்தை எந்த ஒரு க்ரீமாலும் சிவப்பாக மாற்ற முடியாது. இந்த உண்மை அந்த அழகு சாதன தயாரிப்பாளர்களுக்கே தெரியும்.
"டாக்டர்களும் அதைதான் சொல்கிறார்கள் சில நாட்களிலே சிவப்பழகு பெறுங்கள். பெண்களின் நடுவே ஒரு ஹீரோ மாதிரி நடைபோடுங்கள்" என்று சொல்வது வியாபார நோக்கமே தவிர அதில் உண்மை ஒன்றுமில்லை.
இதை நம்பி க்ரீமை வாங்கி தேய்த்துக் கொண்டவர்களில் பாதி பேர்க்கு ஒவ்வாமை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். ஒரு தடவை ஒவ்வாமை நோய் வந்தால் அதிலிருந்து மீண்டு குணம் பெற நீண்ட காலம் ஆகும் என்றும், சிலர்க்கு தோலில் இருக்கும் மெலனின் பாதிக்கப் பட்டு புற்று நோய் வரைக்கும் கொண்டு போய்விடும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். Visit: Crime Novel - Rajeshkumar
65 வயது நிரம்பிய ஒரு முதியவரிடம் "உங்களின் வயது எவ்வளவு?" ஒருவர் கேட்டார்.
அதற்க்கு அந்த முதியவர், "என்னுடைய வயது 5" என்று சொன்னார். கேள்வி கேட்டவர் திகைத்துப் போய், "உங்களுக்கு வயது 65 என்று கேள்விப்பட்டேன். 5 வயது என்று சொல்கிறீர்கள். ஏன்?" என்று கேட்டார்.
அதற்க்கு அந்த முதியவர் "நான் 60 ஆண்டுகளாக மோசமான வழிகளில் பொருள் சேர்த்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்தேன். இந்த 5 ஆண்டுகள்தான் உண்மையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். நான் உண்மையாக வாழ்ந்த அந்த 5 ஆண்டுகளைதான் எனது வயதாகக் கூறினேன்." என்றார்.
நம் நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் வாகன ஓட்டிகளா இல்லை பொது மக்களா ?
இரண்டும் இல்லை, விபத்துக்களுக்கு காரணம் வாகனங்களின் அபிரிமிதமான வளர்ச்சிதான் என்கிறது ஒரு சர்வே. சமீபத்தில் (அதாவது 2012 டிசம்பரில்) கணக்குப் படி இந்தியாவில் உள்ள மொத்த லாரிகளின் எண்ணிக்கை 34 லட்சம், பஸ்களின் எண்ணிக்கை 13 லட்சம் இது தவிர 15 லட்சம் டாக்சிகளும் 1 கோடியே 25 லட்சம் கார்களும் 9 கோடி இரு சக்கர வாகனங்களும், இது தவிர பல லட்சக்கணக்கான மூன்று சக்கர வாகனங்களும் இந்திய முழுவதும் ஓடி கொண்டு இருக்கின்றன . வாகனங்கள் பெருகிய அளவுக்கு சாலை வசதிகள் மேம்படுத்தப் படவில்லை . குறுகிய சாலைகள் , குண்டும் குழியுமான சாலைகள் தான் விபத்துக்கு காரணமாக உள்ளது. 2000 ம் வருடம் சாலை விபத்துகளில் தமிழ் நாட்டில் மரணம் அடைந்தவர்கள் 8269 பேர் . இந்த 2012 ல் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 14359. தேசிய குற்ற ஆவணத்தின் மதிப்பீட்டின் படி சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ் நாடு முதல் இடத்தில் உள்ளது.
சிங்கபூர் ஒரு சிறிய நாடு என்றாலும் கார்களும் மற்ற வாகனங்களும் லட்ச கணக்கில் உள்ள நாடு. இருந்தாலும் சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசலோ, சாலை விபத்துகளோ ஏற்படுவது இல்லை அப்படியே ஒன்றிரண்டு சாலை விபத்து ஏற்பட்டாலும் உயிர் சேதம் உண்டாவது இல்லை.போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சிங்கபூர் அரசு அதிரடியாய் சில முடிவுகளை எடுத்து அதை நடைமுறை படுத்தி வருகிறது. அதில் ஒன்று தனியார் வாகன(கார்) போக்குவரத்தை கட்டுப்படுத்தி வைத்து இருப்பது. ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தனி நபர் வைத்து இருக்கும் கார்கள் சிங்கபூர் சாலைகளில் பயணம் செய்யவேண்டும் அரசு சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அதாவது பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு அங்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சீனாவிலும் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன் கூட்டியே திட்டம் போட்டு அதை செயல் படுத்து கிறார்கள். 2020 ம் ஆண்டில் வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டு சாலைகளை அகல படுத்தி நவீன கட்டமைப்புகளை செய்கிறார்கள்.
அனால் "நம் நாட்டில் இது சத்தியமா" என்ற கேள்விக்கு இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் நம் மத்திய அரசின் சென்ற ஆண்டின் மொத்த வருமானமே 14 லட்சம் கோடி. இதில் 6 லட்சம் கோடி பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் இறக்குமதிக்கே செலவாகி விடுகிறது . நவீன கட்டமைப்புகளுக்கு செலவழிக்க பணம் ஏது? பெட்ரோல் டீசலோடு எத்தனாலை கலந்து உபயோகித்தால் 30 சதவீத அளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தி சாலையின் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பொருள் மிகவும் பழைமையானது; 2000 ம் வருடங்களுக்கு முற்பட்டது என்பதை எல்லாம் எப்படி கண்டறிகிறார்கள்?
அறிவியல் விஞ்ஞானத்தை அடிப்படையாய் வைத்துக் கொண்டு 1949 ம் ஆண்டு வில்லியர்ட் லிபி என்ற ரசாயனத்துறை பேராசிரியர் பழமை வாய்ந்த பொருள்களின் வயதைக் கண்டு பிடிக்க "ரேடியோ கார்பன் டேட்டிங்(Carbon Dating)" என்னும் ஒரு முறையை கண்டு பிடித்தார். கண்டு பிடித்த 11 ஆண்டுகள் கழித்து தான் மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் அந்த முறையை ஏற்றுக் கொண்டார்கள். அதன் விளைவாக 1960 ம் ஆண்டு "வில்லியர்ட் லிபி" க்கு நோபல் பரிசு கிடைத்தது. இவர் கண்டு பிடித்த "ரேடியோ கார்பன் டேட்டிங்" என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
வான வெளியில் உள்ள காஸ்மிக் கதிகள் பூமியை நோக்கி பாயும் பொது அதில் உள்ள நியூட்ரான்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனோடு இணைந்து கிரியை புரிகின்றன. அதன் விளைவாக நியூட்ரான்கள் நைட்ரஜன் அணுக்களில் நுழைகிறது. இப்படி நுழைவதன் மூலம் நைட்ரஜனின் உட்கரு சற்று பெரிதாகி ஒரு ரேடியோ கர்பனாக மாறுகின்றது. இதற்க்கு "கார்பன் 14" என்று பெயர்.
இந்த கார்பன் அணுக்கள் சூரிய வெளிச்சத்தின் உதவியோடு ஒளிச் சேர்க்கை மூலம் எல்லா தாவரங்களிலும் புகுந்து விடுகின்றன. ஒரு மரமோ செடியோ உயிருடன் இருக்கும் வரையில் கார்பன் அணுக்களின் அளவு சீராய் இருக்கும். அதாவது அது காற்றில் இருந்து வாங்கும் கார்பனும், அது வெளிப்படுத்தும் கார்பனும் ஒரே விகிதத்தில் இருக்கும். தாவரம் இறந்ததும் அதற்குள் ரேடியோ கார்பன் புகமுடியாது. அதன் காரணமாய் ரேடியோ கார்பன் -14 கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்கும். 5570 ஆண்டுகளில் பாதியாக குறைந்துவிடும் 11000 ஆண்டுகளில் 25% கார்பன் மட்டுமே அந்த இறந்து போன தாவரத்தில் இருக்கும். ஒரு கட்டத்தில் ரேடியோ கார்பன் சாதாரண கர்பனாய் மாறிவிடும். இந்த ரேடியோ கார்பனின் அளவை வைத்துதான் பூமிக்கடியில் புதையுண்ட பொருள்கள் வெளியே வரும்போது அது எத்தனை ஆண்டுகள் பழைமையானது என்பதை துல்லியமாய் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள்.
*ட்விட்டர், பேஸ்புக் பார்ப்பது வேஸ்ட் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன..?
**அதற்க்கென்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கி பார்ப்பதில் தப்பு இல்லை. வாழ்க்கையில் நாம் புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை அந்த வலை தளங்களில் இரண்டே வரிகளில் சொல்லி அசத்துகிறது ஒரு கூட்டம். அண்மையில் நான் ரசித்த சில வார்த்தை வரிகள்:
1. இன்றைய காலத்து அன்பும் பாசமும் அவரவர் வீடு வளர்ப்பு பிராணிகளோடு முடிந்து விடுகிறது. 2. நட்பை விட பகை 100% நம்பகமானது. 3. சிகரெட்டை அழகாக தயாரித்து அதற்க்கு வெண்ணிற உடை மாட்டி பளபளப்பான எழுத்துக்களில் "உடல் நலத்துக்கு தீங்கானது" என்று எழுதி வைக்கும் பொறுப்பான உலகம் இது. 4. நல்லவனாய் இரு. ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே !. அதை விட முட்டாள்தனமான விஷயம் எதுவும் இல்லை. 5. தமிழ்ப் புத்தாண்டு இரண்டு வகைப்படும். 1.அம்மா தமிழ் புத்தாண்டு; 2. அய்யா தமிழ் புத்தாண்டு; 6. செவ்வாய் கிரகம் செல்ல முடியாத அளவுக்கு தூரமாய் இருந்தாலும் அங்கேயாவது சொந்த நிலம் வாங்கணும்ங்கற வெறியை நமக்கு வரவழைக்கும் பெருமை ரியல் எஸ்டேட் ஓனர்களையும் , கவுன்சிலிங் செய்யும் டி.வி நடிகர் நடிகைகளையுமே சாரும். Visit: Crime Novel - Rajeshkumar