ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் "செர்னோபில்" அணுமின் நிலையம் இருந்தது. 27 வருடங்களுக்கு முன்னால் அந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாய் கடுமையான கதிர் வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. உடனே மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறி பல கிலோ மீட்டர்க்கு அப்பால் போய்விட, அணுமின் நிலையத்திலிருந்து வெளிப்பட்ட கதிர் வீச்சு பக்கத்தில் இருந்த காட்டு பகுதியை பதம் பார்த்தது. கதிர் வீச்சின் பாதிப்பால் பச்சை இலைகள் மெல்ல மெல்ல அதன் நிறத்தில் இருந்து சிவப்பாக மாறிவிட்டது. மரங்கள் மட்டுமல்ல பாறைகளும் பழுப்பு நிறத்திலிருந்து சிவப்பாக மாறிவிட்டது. இப்போது 10 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அந்த காடு "சிவப்பு" நிறத்தில் உள்ளது.
# ரெட் பாரஸ்ட், வேர்ம்-வுட் பாரஸ்ட்
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=666791776677253&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த எண்ணெய் "தேங்காய் எண்ணெய்" தான்.
சொன்னது நம் நாட்டு உணவியல் விற்பன்னர்கள் அல்ல அமெரிக்காவில் உள்ள விற்பன்னர்கள்.இதை நம் உணவில் சேர்த்தால் உடலில் கொலஸ்ட்ரால் கூடி அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் ஏற்படும் என்பது உண்மையல்ல.
தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான "சூப்பர் ஸ்டார்" என்று உறுதியாக சொல்லும் அமெரிக்கா, தேங்காய் எண்ணையை பெருமளவில் இறக்குமதி செய்கிறது. காரணம் தேங்காய் எண்ணெய்யில் மோனோலாரின் என்ற மருத்துவ குணமுள்ள சத்து பொருள் உள்ளது. "மோனோலாரின்" என்பது லாரிக் அமிலம். இந்த லாரிக் அமிலம் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்தபடியாக தாய்பாலில் தான் உள்ளது.
இந்த தகுதி ஒன்று போதாதா?
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=666809393342158&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
விளம்பர மீடியாக்களை சார்ந்தவர்கள், இந்தியாவில் கருப்பாக இருப்பதே பாவம் என்பது போல் விளம்பரங்களில் சித்தரித்து, "ஒரே வாரத்தில் கருப்பு நிறத்தில் இருந்து விடுபட்டு சிவப்பழகுக்கு மாறுங்கள்" என்று ஏகப்பட்ட முகக் கிரீம்கள் சந்தையில் இறங்கிவிட்டன. ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ கருப்பாக இருந்தால் அது அவர்கள் ஜீன் சம்பத்தப்பட்டது. இயற்கையாய் அமைந்து விட்ட கருப்பு நிறத்தை எந்த ஒரு க்ரீமாலும் சிவப்பாக மாற்ற முடியாது. இந்த உண்மை அந்த அழகு சாதன தயாரிப்பாளர்களுக்கே தெரியும்.
"டாக்டர்களும் அதைதான் சொல்கிறார்கள் சில நாட்களிலே சிவப்பழகு பெறுங்கள். பெண்களின் நடுவே ஒரு ஹீரோ மாதிரி நடைபோடுங்கள்" என்று சொல்வது வியாபார நோக்கமே தவிர அதில் உண்மை ஒன்றுமில்லை.
இதை நம்பி க்ரீமை வாங்கி தேய்த்துக் கொண்டவர்களில் பாதி பேர்க்கு ஒவ்வாமை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். ஒரு தடவை ஒவ்வாமை நோய் வந்தால் அதிலிருந்து மீண்டு குணம் பெற நீண்ட காலம் ஆகும் என்றும், சிலர்க்கு தோலில் இருக்கும் மெலனின் பாதிக்கப் பட்டு புற்று நோய் வரைக்கும் கொண்டு போய்விடும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=666827016673729&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater