Wednesday, 16 October 2013

சாம்பாரிலும் ரசத்திலும் எதுக்காக "கடுகு" பயன்ப்படுத்துகிறோம்?

நாம் சாப்பிடுகிற உணவு வகைகளில் ப்ரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ம் மற்றும் மக்னீசியம் மாதிரியான எல்லா சத்துகளும் எதாவது உணவு பண்டம் மூலமாக நம் உடம்புக்கு கிடைக்கும். ஆனால் கிடைக்காத சத்து ஒன்னே ஒன்னுதான்.

அது "சல்பர் (கந்தகம்)"

அந்த சல்பரை ஸ்டாக் வைத்திருக்கிற ஒரே ஒரு பொருள் கடுகுதான். இந்த கடுகை தனியா சமைச்சு சாப்பிட முடியாது. அதனால் சாம்பாரையும் ரசத்தையும் தயாரிக்கும் பொது பயன்படுத்துகிறோம். இந்த கடுகு, எண்ணையில் வெடிக்கும் பொது சல்பர் வெளிப்பட்டு சாம்பாரிலும், ரசத்திலும் கலக்கிறது.



Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=587205231302575&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
எல்லா மனிதர்களிடமும் உள்ள மிகப்பெரிய குறை...
.
.
.
*பிறரை குறை கூறுவது தான்.





Visit: Crime Novel - Rajeshkumar
* உலகில் மொத்தம் 6800 மொழிகள் உள்ளன. இதில் அதிகமாய் பேசப்படும் மொழி "சீனமொழி".

* அமெரிக்காவில் 6 மொழிகள் அதிக மக்களால் பேசப்படுகிறது. அவை ஆங்கிலம், பிரெஞ்ச், சைனீஷ், அராபிக், ருஷ்யன், ஸ்பானிஷ்.

* தாய் மொழிக்கு முதல் இடம் கொடுப்பவர்கள் ஜப்பானியர்கள். ஆனால் இந்தியாவில் தாய் மொழிக்கு கடைசி இடம்.

* உலகத்திலே இந்தியர்கள் தான் ஆங்கில மொழியை அதிகமாக பேச பயன்ப்படுத்துகிறார்கள்.

* ஆங்கிலம் பேசினால் அவன் அறிவாளி என்ற கருத்து இந்தியாவில் மட்டுமே உள்ளது.

* தமிழ்நாட்டில் தமிழே இல்லை. இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் அங்கே:
"ஹலோ...ஹொவ் ஆர் யூ?" என்ற குரல் தான் கேட்கிறது.


Visit: Crime Novel - Rajeshkumar

நம்முடைய பூமி பந்து 75% நீரால் சூழப்பட்டுள்ளது என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிந்தது தான். 

ஆனால் அது பெரும்பாலும் கடல் நீர் என்பதும் நீரின் 97.5% மனிதன் உபயோகபடுத்துவதற்கு தகுதி இல்லாதது என்பதும் 2.5% நீர் மட்டுமே மனிதனுக்கு பயன்படும் என்பதும் கசப்பான உண்மை. 

உலகில் பெருகி வரும் ஜனத் தொகையின் காரணமாக அடுத்த நூறு வருடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்ப்பட்டு உலக நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிட்டு கொள்ள கூடிய நிலைமை உருவாகும் என்பது ஐ.நா. சபையின் கவலை.


Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=589741811048917&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
ஒரு நெகிழ்ச்சியான குட்டி கதை:

ஒரு அப்பாவும் மகனும் ரயிலில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். மகனுக்கு 25 வயது. ரயிலில் புறப்பட்ட சில நிமிஷத்திலிருந்து அந்த இளைஞன் ஜன்னலை விட்டு அசையாமல் ஆர்வமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் திடீரென்று அப்பாவிடம் திரும்பி கத்தினான்.

"அப்பா...! என்ன இது ஆச்சர்யம்? ரயில் முன்னாடி போயிட்டு இருக்கும் பொது மரங்கள் எல்லாம் பின்னாடி போயிட்டு இருக்கு...?"

அவன் அப்படி பேசியதை கேட்டு எதிர் சீட்டில் இருந்த ஒரு கணவனும் மனைவியும் சிரித்தார்கள். பையனின் அப்பாவிடம் கேலியாய் சொன்னார்கள்.
"என்ன இவ்வளவு பெரிய பையன் ஒரு சின்னக் குழந்தை மாதிரி பேசறான், நடந்துக்கிறான். மோதல்ல ஒரு நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டு போங்க."

அவர்கள் அப்படி சொன்னதை கேட்டு பையனின் அப்பா சிரித்தார்.
"நானும் என்னோட பையனும் இப்போ ஹாஸ்பிட்டலில் இருந்துதான் வர்றோம். அவனுக்கு பிறவியில் இருந்தே பார்வை இல்லை. போன வாரம் ஆபரேஷன் நடந்து மாற்று கண் பொருத்தினார்கள். பார்வை கிடைத்து விட்டது. பார்வை வந்த பிறகு அவன் பயணம் செய்யும் முதல் ரயில் பயணம் இது. அது தான் எல்லாத்தையும் ரசிச்சுகிட்டு வர்றான். அவன் அப்படி கத்துறது உங்களுக்கு தொந்தரவாய் இருந்தா அவன் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுகிறேன்."


Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=590186161004482&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater